- ஒரு மனிதனின் குறைத்த பட்ச தேவையும் அதிக பட்ச தேவையும் ஒன்றே ஒன்றுதான் அது உண்மையாக அன்பு காட்டும் ஒரு உள்ளம்....
- புருசன் பொண்டாட்டிய அடிச்சா நியூஸ் பேப்பர்ல வருது.. பொண்டாட்டி புருசன அடிச்சா ஜோக்குலதா வருது...
- ஒருவர் உன்னை தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு.. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு.
- நன்றியை மறக்கும் மனிதனை விட நன்றியோடு வாழும் நாயே சிறந்தது
- அதிகம் விட்டு கொடுத்து போரவன் கிட்ட உன் திமிர காட்டாதே ...முடிஞசா அவங்க ஏன் உங்களுக்காக விட்டு கொடுத்து போராங்க என யோசிங்க....
- தன் குறையை அறிய தொடங்கி விட்டால் மற்றவர்கள் பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது...
- காதலித்து வெற்றி பெற்றவனுக்குத்தான் தெரியும். அந்த வெற்றி எவ்வளவு கொடுமையானது என்று
- அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்...
- வாழ்க்கைல நிம்மதி வேனும்னா ரெண்டு பேர கண்டுக்கவே கூடாது.. 1.நமக்கு பிடிக்காதவங்க.. 2. நம்மை பிடிக்காதவங்க...
- ரெண்டு பேரு சண்டை போட்டு கிட்டா மூணாவதா ஒரு ஆள் போய் விலக்கி விடுவான்.. இப்போ எல்லாம் மூணாவது ஆள் வீடியோ எடுக்கிறான்...
- இந்த உலகில் மாற்றத்தை விரும்பினால், அதை முதலில் உன்னிடம் இருந்து ஆரம்பி..
- காரணத்தோடு யாரையும் நேசிக்காதே .காரணம் இல்லாமல் யாரையும் வெறுக்காதே. இரண்டுமே உன்னை காயப்படுத்தும்..
- உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை.. (சார்லி சாப்ளின்)...
- சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதே அதுவே உன் பெறும் தவறாகிவிடும்..
- அளவுக்கு மீறிய நல்ல விஷயங்கள்,கெட்ட விஷயங்களாகவே மாறுகிறது
- ஒன்று நடந்தே தான் தீரும் என்றால் நடந்தே தான் தீரும் இதில் கவலை பட என்ன இருக்கிறது....
- 4g மாதிரி உழைக்கனும் .2 g மாதிரி செலவு பன்னனும் .அப்பதா வாழ்க்கையில் முன்னேற முடியும்..
- புத்தகங்களும் நண்பர்களும் அதிகமாகவும், நல்லவைகளாகவும் இருக்க வேண்டும்...
- பிரியாணி வேணும்னா கூட உடனே சமைக்கலாம்.. ஆனால் பழைய சோறு வேணும்னா ஒரு நாள் வெயிட் பண்ணிதா ஆகனும்.இது தா வாழ்க்கை....
- மிக்சர்ல தேடி பொறுக்கி திங்குற வேர் கடலை மாதிரி தான். சில விஷயங்கள் வாழ்க்கையில தேடுனாதா கிடைக்கும்..
- பொதுவாக எல்லோரும் சந்திக்கும் இடம் சமாதி தான்.
- வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்...
- எதுவுமே சரியில்லாத போதும் எல்லாம் சரியாகி விடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை.
- மன அமைதிக்காக யோகா தான் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. மனைவியை ஒரு வாரம் அம்மா வீட்டுக்கு அனுப்பியும் பயன் பெறலாம்...
- ஒருத்தர நம்பி ஏமாந்தவங்க தான்,தன்னை நம்பி வந்தவங்களை ஏமாத்த மாட்டாங்க.ஏனா அதோட வலி அவுங்களுக்கு தான் தெரியும்..
- தவறாக இருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருந்தால் நீ புத்திசாலி. அதுவே சரியாக இருந்தும் வாயை மூடிக்கொண்டிருந்தால் நீ புருசன்..
- ஏணியின் உச்சியை அடைய வேண்டும் என்றால் அதை கீழ் படியில் இருந்து தொடங்க வேண்டும்..வாழ்க்கையும் அப்படித்தான்..
- என் தவறை என்னிடம் தயங்காமல் கூறுபவன் நண்பன்.என் தவறை மற்றவர்களிடம் தாங்காமல் கூறுபவன் துரோகி...
- ஆண் தனக்கு இன்னொரு தாயின் அன்பையும்.,பெண் தனக்கு இன்னொரு தந்தையின் அன்பையும் உணர்வது உண்மையான காதல்...
- சோறு பொங்கும் போது கேச கம்மி பண்ணணும். மனசு பொங்கும் போது வாய்ச கம்மி பண்ணணும் .இரண்டுமே மிக சிறந்த பாதுகாப்பு..
- துரோகம்ன என்ன. பச்ச துரோகம்ன என்ன?.போண்டால 1/2 முட்டை இருந்தா அது துரோகம்.போண்டால முட்டையே இல்லையினா அது பச்ச துரோகம்..
- காலத்தை தவிர வேறொன்றும் நமக்கு சொந்தமில்லை...
- இனிப்பாய் இருந்தால் விழுங்கி விடுவார்கள். கசப்பாய் இருந்தால் துப்பி விடுவார்கள். உப்பாய் இருங்கள் அப்போதுதான் சரியாக உபயோகிப்பார்கள்..
- புத்தியில்லாத மனைவி கணவனை அடிமையாக்கி தாணும் அடிமைக்கு மனைவியாக வாழ்கிறாள். புத்தியுள்ள மனைவியோ கணவனை ராஜாவாக்கி அவளும் ராணியாக வாழ்கிறாள்..
- இந்த உலகம் நீ நன்மை செய்யும் போது உன்னை கவனிக்காது. தீமை செய்யும் போது உன்னை விமர்சிக்காமல் இருக்காது...
- ஓர் உறவை நம்பி இன்னொரு உறவை கை விட்டால் நிச்சயம் தனிமை படுவீர்கள்.
- உன்னை வெறுக்கும் பெண்ணிடம் கெஞ்சாதே .உன்னை விரும்பும் ஆணிடம் அதிகம் ஆடாதே..
- உயிர் பிரியும் வலியை விட பிகர் பிரியும் வலிதான் அதிகம் அதனால் தான் ஆண்டவன் ஒரு உயிரையும் ஆயிரம் பிகரையும் படச்சிருக்கான்...
- எதிர் பார்த்த போது கிடைக்காத அன்பு எத்தனை முறை பிறகு கிடைத்தாலும் அது வீண்.
- தனது நிறை குறைகளை தானே வடிவமைத்து கொள்பவன் தன் வாழ்வில் வெற்றி அடைகிறான்..
- இரும்பில் இருக்கும் ஈரம் கூட சிலர் இதயத்தில் இருப்பது இல்லை.
- கிராமத்து பொண்ணுங்க துப்பட்டா விலகுனாலே மானம் போறதா நினைப்பாங்க. சிட்டி பொண்ணுங்க துப்பட்டா போடுரதையே அவமானமுனு நினைக்குறாங்க..
- இறப்பு செல்லி விடுகிறது மனிதர் அனைவரும் சமம் என்று. நாம் அதை தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறோம்.
- பஸ்சில் ஏரியவுடன் சீட் இருக்குதா என பார்ப்பவன் மனிதன்..பிகர் இருக்குதா என பார்ப்பவன் மாமனிதன்.
- மின்சாரம் இல்லாத போது தேவைப்படும் மெழுகுவர்த்தி போல சிலர் தேவைப்படும் போது மட்டும் தேடப்படுகின்றனர்.
- நமக்காக உயிரை விடுபவர்களை எப்படி பிடிக்காமல் போகும். அதனால் தான் எனக்கு சிக்கன் மட்டன் மீன் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
- அழகாக இருப்பதாக தற்பெருமை காட்டிக்கொள்ளும் அனைவரையும் ,இறைவன் ஆதார் அட்டை,ஓட்ரஸ் ஐடி வழியாய் தண்டித்து விடுகிறான்..
- பசி என்னும் கொடிய நோயை நீ போக்கினால் ,இந்த உலகில் உன்னை விட சிறந்த மருத்துவர் எவரும் இல்லை..
- சந்தோஷமாக வாழ முயற்ச்சிக்காதே, நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்கும்.
- கோபத்திலும் உங்களை சபிக்காத உறவுகள் கிடைத்தால் பத்திரப்படுத்தி கொள்ளுங்கள் .நீங்கள் சேர்க்க மறந்த சொத்துக்கள் அவர்கள்.
- உழைக்கும் ஆசை வந்துவிட்டால் ஒருவனிடம் வேறு எந்த ஆசையும் வராது. அப்துல் கலாம்..
- பேசுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட கை பேசி .....எல்லோரையும் ஊமையாக்கி விட்டது.
- அன்பான மனைவி இருந்தால் அது சூப்பர்.. அவளுக்கு ஒரு தங்கச்சி இருந்தால் அது நமக்கு offer..
- பல முடிகள் விழுந்தால் அது வழுக்கை. பல அடிகள் விழுந்தால் அது வாழ்க்கை. ஆரம்பத்தில் கஷ்டமாதா இருக்கும் ,அப்பரம் அதுவே பழகிரும்.
- உரிமை இல்லாதவங்க கூட போடுற சண்டையும் ,அன்பு இல்லாதவங்க மேல் காட்டுற அக்கறையும்,எப்பவுமே நம்மள காயப்படுத்தி கொண்டே இருக்கும்.
- உடலுக்கு துணையாய் அல்ல. மனதுக்கு துணையாய் வாழ்பவர்களே கணவன் மனைவி...
- விளக்குமாத்த வச்சு அடித்து கொடுத்தாலும் வெட்கம் இல்லாமல் திண்பது ஹோட்டல் தோசையை தான்..
- செய் அல்லது செத்து மடி.... நேதாஜி.. படி அல்லது பண்ணி மேய்... என் பிதாஜி
- பொண்ணுங்க மனசு தோசை மாதிரி ஒரு பக்கம் வெள்ளையாவும் இன்னொரு பக்கம் கருப்பாகவும் இருக்கும். பசங்க மனசு இட்லி மாதிரி சுத்தி சுத்தி பாத்தாலும் வெள்ளையாதா இருக்கும்..
- உன் அப்பா ஏழை என்றால் அது உன் விதி. ஆனால் உன் மாமனார் ஏழை என்றால் அது உன் இழிச்சவாய் தனம்.
- மனைவியை எங்கும் விட்டுக்கொடுக்காத கணவன். கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி. நண்பர்கள் போன்ற பிள்ளைகள் ,இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே..
- கை கழுவும் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தால் நிறைய தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம்..
- நிம்மதியாக இருக்கும் நேரத்தில் மனைவியை தேடுவதும் ,மனைவி வந்த பின் நிம்மதியை தேடுவதும்,ஆண்களின் தேடுதல்.
- எல்லாம் கடைசியில் சரியாகி விடும். அப்படி சரியாகவில்லை என்றால் அது கடைசி அல்ல.
- நம்ம ஊர் மக்கள் இலவசம் என்றதும் மூஞ்சியை சுளிக்கும் ஒரே விசயம் இலவச கழிப்பிடம் மட்டுமே.
- வாலிபத்தில் தான் ஹேர் ஸ்டைல். அதற்கு பிறகு ஹேர் இருந்தாலே ஸ்டைல் தான்...
- அந்த காலத்தில் விடிய விடிய மண்ணை நோண்டி தண்ணீர் எடுத்தார்கள் .இந்த காலத்தில் விடிய விடிய போனை நோண்டி கண்ணீர் வடிக்குறார்கள்.
- நீயா நானா என்பது அழிவின் ஆரம்பம். நீயும் நானும் என்பது வெற்றியின் தொடக்கம்.
- நீ நல்லவன் என்பதால் உன்னை யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என எதிர் பார்ப்பது, நீ சைவம் என்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாது என நம்புவதற்கு சமம்.
- கல்யாண வீட்ல நண்பனின் இலையில் இருந்து அப்பளத்த சுடுறதே தனி சந்தோசந்தா.
- உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து தேர்வு வைப்பது இல்லை தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கபடுகிறது
- கிடைக்காத பெண்ணிற்காக காதலயும் வெறுக்காதே. கிடைக்காத காதலுக்காக பெண்ணையும் வெறுக்காதே..
- எப்படா இவ பேசுவா என்பதற்கும், எப்படா இவ பேச்ச நிறுத்துவா என்பதற்கும் இடைபட்ட காலம் தான் காதல்.
- பழகும் முன் முகம் பார்த்து வரும் ஒரு சில நட்பு பழகிய பின் அன்பு பார்த்து வரும் ஒரு சில நட்பு சுயநலம் பார்த்து வரும் ஒரு சில நட்பு பணம் பார்த்து வரும் ஒரு சில நட்பு ஆனால் துன்பம் வரும்போது மட்டுமே தெரிந்து விடும் உண்மையான நட்பு
- குத்து விளக்கு போல் பெண்ணை தேடுகிறான் ஆண். அலாவுதீன் விளக்கு போல் ஆண்களை தேடுகிறாள் பெண்.
- நாக்கிற்கு எலும்புகள் இல்லை. ஆனால் நம் எலும்புகளை உடைப்பதற்கான முழு பலம் அதற்கு உண்டு. ஆகவே பேசும் வார்த்தையை பார்த்து பேசுவோம்.
- மூளை இருக்கானு கேட்டா கோவிச்சுக்காம பதில் சொல்லுறவங்க மட்டன் கடைகாரர்கள் மட்டுமே.
- தோல்வியில் இருந்து நீ எதையும் கற்று கொள்ள வில்லை என்றால் அது தான் உனக்கு உண்மையான தோல்வி.
- மதம் என்பது ஜட்டி மாதிரி ,நீ போட்டுக்கோ இல்ல போடாம இரு. அது உன் இஷ்டம். ஆனா அடுத்தவன உன் ஜட்டிய போட்டுக்க சொல்லி வற்புற்தாதே.
- கோழியின் கண்ணீர் வரிகள்.... காலையில் கொக்கரக்கோ என்றேன் .மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
- ஒவ்வொரு ஆணும் ஒரு கூர்மையான போர் வாள் போன்றவன் .அதனால் தான் பெரும்பாலும் பெண்கள் வெங்காயம் வெட்ட பயன் படுத்துகிறார்கள்...
- உன்னை முட்டாள் என்று சொல்பவரிடம் தயவு செய்து அறிவாளியாக காட்டி விடாதே .அதை விட முட்டாள் தனம் வேறு இல்லை.
- கால்கள் இரண்டையும் தரையில் தேய்ந்து உதடு மடிந்து அனுமார் போல் வாயை வைத்திருந்தால் ,பெண்கள் பைக்கை நிறுத்த போகிறார்கள் என்று அர்த்தம்.
- பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடு என ரெண்டு வீடு இருக்கும் போது, ஆண்களுக்கு பெரிய வீடு, சின்ன வீடுனு இருக்க கூடாதா
- யாரை பிரிந்த பின் உன்னால் எப்போதும் போல இயல்பாக இருக்க முடிய வில்லையோ அவர்கள் தான் உன் இதயம் என்று புரிந்து கொள்..
- ஆண்கள் சொல்லும் இன்னும் 5 நிமிசத்துல வீட்டுல இருப்பேன் என்பதும் ,பெண்கள் சொல்லும் இன்னும் 5 நிமிசத்துல ரெடியாயிடுவேன் என்பதும் ஒரே அர்த்தம் தான்..
- நல்ல முடிவுகள் அனுபவத்துலிருந்து பிறக்கின்றன.ஆனால் அனுபவமோ தவறான முடிவிலிருந்து கிடைக்கின்றது.
- பணம் சம்பாதிக்க ஆயிரம் கஷ்ட்ட பட்டாலும், அவமானபட்டாலும் அதை மனதோடு வைத்து கொண்டு புன்னகையால் குடும்பத்தை நடத்தும் ஒவ்வொரு ஆணும் புனிதமானவனே..
- பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்கள். ..காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற்போல் உருவாக்கப்படலாம்..
- இன்பமோ துன்பமோ வெற்றியோ தோல்வியோ ,கஷ்டமோ நஷ்டமோ வாழ்வோ தாழ்வோ தனக்கு நடக்கும் வரை உலகத்தில் நடக்கும் இவை அனைத்தும் வேடிக்கை தான்.
- உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் முறுக்கு சாப்பிடும் போது நாக்க கடிச்சா வருமே ஒரு வலி அதா..
- பதினாறு பெற்று பெரும் வாழ்வு வாழ்க அர்த்தம் இதோ..... 1.புகழ்,2.கல்வி,3. வலிமை.,4.வெற்றி,5.நல் மக்கள், 6.பொன்,7.நெல்,8. நல்லூர், 9.நுகர்ச்சி,10. அறிவு, 11.அழகு,12.பெருமை,13.இளமை ,14.துணிவு,15.நோயின்மை மற்றும் 16. வாழ்நாள்... இவையே....
- ஒரு தாய் தன் பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம் .பெற்றதற்காக அழக்கூடாது.
- எல்லாருக்கும் எல்லாமே நன்மை பயப்பதில்லை .எல்லோரும் எல்லாவற்றிலும் இன்பம் காண்பதில்லை.
- தமிழ் நாட்டுல 100 ஐ அழுத்துனா போலீஸ் வரும். அதே 100 கைல வச்சு அழுத்துனா போலீஸ் பொயிரும்.
- உலகில் மிக மலிவான பொருள் அன்புதான் அது விற்பவர்க்கும் வாங்குபவர்க்கும் பன் மடங்கு லாபத்தை தரும்.
- நாம் வாழும் வரை யாரும் நம்மை வெறுக்க கூடாது. வாழ்ந்த பின்பு யாரும் நம்மை மறக்க கூடாது.
- நாம் இல்லாத இடத்தில் நம்மை பற்றி என்ன பேசியிருப்பார்கள் என்பது தெரிந்து இருந்தால் இவ்வுலகில் எந்த உறவும் நீடிக்காது.
- மீண்டும் அதே போல அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவரை மட்டும் அல்ல ...பள்ளி கூட வகுப்பறையும் தான்.
- பையனா? பொண்ணா? என கேட்டறிந்த பிரசவத்தை.. நார்மலா?சிசேரியனா?என மாறி கேட்க வைத்தது நவீன மருத்துவம்.
- உயிரை கொடுக்கும் அளவிற்கு நட்பு அமைவதற்கு கொடுத்து வைத்திருக்கனும்னு சொல்லுறாங்க. எங்க நமக்கு வந்து வாச்சதெல்லாம் உயிரை எடுக்குது.
- புடிச்சதை செய் .நீ செத்ததுக்கு அப்பறம் யாரும் உனக்கு சிலை வைக்க போவது இல்லை.
- ஒரு சொட்டு கூட ரத்தம் வராமல் ஒருவரை கொன்று விடும் ஆற்றல் மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு தான்.
- மரண பீதின என்ன தெரியுமா? maths teacher நம்மள கை காட்டி கூப்பிடும் போது நீதா வா னு சொல்லும் போது வருமே அப்பப்பாாாா அதா.
- எருமை மாடு பால் கொடுக்க பயன் படுவதை விட ,பெற்றோர்கள் நம்மை திட்டுவதற்கே அதிகம் பயன்படுகிறது.
- பகலில் தூக்கம் வந்தால் உடம்பு பலவினமா இருக்குனு அர்த்தம். இரவு தூக்கம் வந்தால் மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்.
- பல நல்ல ஜோடிகளை பிரித்த பெருமை ஜாதகத்திற்கு உண்டு..
- மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை வாசலில் வந்து அழைத்தான் பிச்சைகாரன் அம்மா என்று..
- எத்தனை பேர் எச்சில் பட்டாலும் தீட்டு என்று ஒதுக்கப்படாத ஒரே பொருள் "பணம்"ஒன்று தான்.
- சிரித்து பாருங்கள் உங்கள் முகம் உங்களுக்கு பிடிக்கும்..பிறறை சிரிக்க வைத்து பாருங்கள் உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.. .😃😃😃😃😃😃😃😃
- யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்று கொள்..ஏனெனில் இந்த உலகில் மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்...❤️❤️
- சிலருக்காக சிலரை பிடிப்பது போல நடிப்பதும் சிலருக்காக சிலரை பிடிக்காதது போல நடிப்பதும் தான் இன்றைய உறவுகள்
- சேமிப்பு இல்லை என்று வருந்தாதே கடன் இல்லை என்று சந்தோஷபடு..
- ஏமாற்றுவதை விட தோற்று போவது மரியாதைக்குரியது...
- தலை கீழாக நின்றாலும் தலையில் எழுதியது நடந்தே தீரும் /.......
- பணம் வந்ததும் ஆடாதே என்று சொல்பவனிடம் கையில் பணத்தை கொடுத்தால் அவனும் ஆடத்தான் செய்வான்..
- சுடுகாடு தானேனு சீப்பா நினைக்காதீங்க அங்க போறதுக்காக அவ அவ உயிரையே கொடுக்குறா..
- விழுந்து விழுந்து சிரியுங்கள் ஆனால் விழுந்தவனை பார்த்து சிரிக்காதீர்கள்..
1 Comments
Super Bro and More Meaningful 👍👍👍👍
ReplyDelete