சிரிக்க! மகிழ! சிந்திக்க!

 
பதிவு 1 
                                         படிக்காத நாய்

                  ஒரு பெண், தன் வீட்டில் ஒரு நாய்க் குட்டியை வளர்த்துக் கொண்டிருந்தாள். அது தண்ணீர் குடிப்பதற்காக ஒரு சிறிய கிண்ணம் வாங்கக் கடைக்குப் போனாள். கடைக்காரன் இரண்டு கிண்ணங்களை எடுத்து வைத்தான். ஒன்றில் 'நாய் குடிக்கும் கிண்ணம்" என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொன்றில் எதுவும் எழுதப்படவில்லை. அவன் 'நாய் குடிக்கும் கிண்ணம்" என்பதை அவளிடம் எடுத்துக் கொடுத்து, அதையே வாங்கிக் கொள்ளும்படி அறிவுரை கூறினான். 'என்னுடைய நாய்க்குப் படிக்கத் தெரியாது. அது மிகவும் குட்டி" என்று சொல்லிவிட்டு எழுத்தில்லாத கிண்ணத்தையே எடுத்துக் கொண்டாள் அவள்.  

Post a Comment

0 Comments