பதிவு 2
மருத்துவரின் மறதி
ஒரு நோயாளிக்கு வயிற்றில் அறுவை மருத்துவம் நடத்தப்பட இருந்தது. அவருடைய பக்கத்திலிருந்தவர் 'இந்த டாக்டர் மிகவும் ஞாபக மறதி கொண்டவர்É முன்பு ஒரு சமயம் அறுவை மருத்துவம் செய்த போது வயிற்றின் உள்ளே கத்தரிக்கோலை வைத்துத் தையல் போட்டு விட்டார். அதனால் மறுபடியும் அந்த நோயாளியின் வயிற்றை அறுவை செய்ய வேண்டியதாகி விட்டது" என்று சொன்னார்.
அந்த நோயாளியின் வயிற்றில் அறுவை செய்யப்பட்டது அவரை வெளியே கொண்டு வந்தார்கள். அவரது மயக்கம் தெளிந்தது. தன்னை விசாரிக்கவே அவர் வருகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நோயாளியிடம், 'எனது கையுறை காணவில்லையே" என்று சொன்னார் அவர், நோயாளி உடனே மயக்கம் அடைந்தார்.
0 Comments