வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்

வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்



                   அது ஒரு அழகான ஏரி, அதைச் சுற்றிலும் பச்சை பசேலென புல்வெளி, அருமையான தென்றல் காற்று, பறவைகளின் ரீங்கார ஓலி என இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சூழல். பார்ப்பவர் தன்னை மறந்து அந்த இடத்தை ரசிக்கும் ஒரு ரம்மியமான காட்சி. அந்த ஏரியில் பல படகுகள் கட்டப்பட்டிருந்தன. அதில் ஒரு படகில் ஒரு 17 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் அவனுடைய படகில் படுத்து நன்கு ஒய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதிக்கு ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் மீன் பிடிக்கும் தூண்டிலுடன் அங்கு வந்தார். அந்த பெரிய மனிதர் அங்கு அந்த இளைஞன் தூக்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். அவன் பக்கமாக சென்று அவனை எழுப்பி அவனிடம் போசத் தொடங்கினார்.
               அந்த இளைஞனை பார்த்து இவ்வாறாக கேட்டார் “ உன்னை பார்ப்பதற்கு இளைஞனாக இருக்கிறாய் மிகவும் வலிமையாக தென்படுகிறாய் ஏன் இந்த அருமையான காலைப் பொழுதில் உழைக்காமல் படுத்துறங்கி காலத்தை போக்குகிறாய்? ” என்றார். உடனே அந்த இளைஞன் பதில் சொன்னான்: நான் இரவு நேரத்தில் மீன் பிடிப்பேன், பிடித்த மீன்களை காலையில் சந்தைக்கு கொன்டு சென்று விற்பனை செய்வேன், அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என் குடுப்பத்தைக் கவனித்துக் கொள்கிறேன் என்றார். 
                      உடனே அந்த மனிதர் ‘இளம் வயதில் தான் நீ நன்றாக சம்பாதிக்க முடியும் அதன்பின் வயது முதிர்ந்த காலத்தில்  நீ சம்பாதித்ததைக் கொண்டு  மகிழ்ச்சியாக வாழ முடியும்’ என்றார். மேலும் அவர் நீ இந்த இளம் வயதில் வேலை செய்தால் நிறைய பணம் ஈட்ட முடியும் அதன் மூலம் பெரிய படகொன்றை வாங்கினால் இன்னும் அதிகமான மீன்களைப் பிடித்து விற்று நீ பெரிய முதலாளியாகி நிறைய பணம் சம்பாதிக்கலாம், என்னைப் போல ஓய்வுக்காக இந்த அருமையான ஏரியின் பக்கமாக வந்து அமைதியாக இழைப்பாறலாம் என்று சொல்லிமுடித்தார். 
                 அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சியோடு பதில் சொன்னான் அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். அந்த மனிதர் வாயடைத்துப்போனார். அவர் ஒரு தொழிலதிபர் வாழ்கையில் நிறைய பணத்தை சேமித்தவர். பணம் மட்டுமே வாழ்கை என்று வாழ்ந்து வந்தவர். அந்த இளைஞனின் வார்த்தைகளைக்; கேட்டு வியந்துப்போனார். இத்தனை நாள் மகிழ்ச்சி என்பது பணத்திலும், பதவியிலும், பொருளிலும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் தினமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அன்றைய நாளுக்கான உணவே போதுமானது என்று புரிந்துக்கொண்டார்.
                       இதை இவ்வளவு காலம் தாழ்த்தி தொரிந்து கொண்டதை நினைத்து மனம் வருந்தினார். பணம் மட்டுமே வாழ்கையில்லை, மாறாக உண்iயான அன்பும், அமைதியான உள்ளமும், தேவையான உணவுமே மகிழ்சியான வாழ்க்கைக்கு தேவை என்பதை உள்ளாற உணர்ந்தார். அந்த இளைஞனுக்கு நன்றிகூறி புறப்பட்டு போனார்.

மகிழ்ச்சியாக வாழ மன அமைதியே தேவையானது.

Post a Comment

0 Comments