கர்ப்பிணி மான்
ஒரு காலத்தில் ஒரு கர்ப்பிணி மான் இருந்தது, அந்த மான் தான் பிரசவிக்கிற நேரம் நெருங்கி வந்துவிட்டது என்பதை அது உணர்ந்தது. அங்கு ஒரு புரண்டு ஓடும் ஆற்றின் அருகே ஒரு ஒதுங்கிய இடத்தைக் கண்டது. அந்த பொழுதே இருண்ட மேகம் கூடி, ஒரு வலுவான மின்னல் வெட்டி, காட்டில் விழுந்து காட்டுத் தீயைத் தொடங்கியது. அந்த மான் இடது பக்கம் பார்த்தாது, அங்கே ஒரு வேட்டைக்காரன் இருப்பதைக் கண்டது, அவன் மானை சுட தயாராக இருந்தான். அந்த மான் வலது பக்கம் பார்த்தது, அங்கு ஒரு பசியுள்ள சிங்கத்தைக் பார்த்தது மான், அது அந்த மான் மீது துள்ளிக் தாக்குவதற்காக காத்திருந்தது.
ஓ! என் கடவுளே இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்வது? ஒரு புறம் காட்டுத் தீ இருக்கிறது,; வேகமாக ஓடும் நதி இருக்கிறது, மற்றொருபுறம் வேட்டைக்காரன் இருக்கிறான், சிங்கம் இருக்கிறது. அந்த மானால் எங்கும் செல்ல முடியவில்லை. வெளியேற வழியில்லாத இந்த சூழ்நிலையில், மான் தன்னால் கவனம் செலுத்தக்கூடிய ஒரு வி~யத்தில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்தது. அதுதான் தான் குட்டியை பிரசவிப்பது. அந்த மான் தான் பெற்றெடுக்கும் போது அதன் முழு கவனத்தையும் செலுத்தியதால், பின்வரும் வி~யங்கள் நடந்தன. திடீரென பழிச்சிடும் மின்னல் மின்னியது, வேட்டைக்காரன் திசைதிருப்பப்பட்டான். அவன் அம்பை விட்டபோது, அது மானைக் கடந்து, பசியுள்ள சிங்கத்தைத் தாக்கியது. உடனே சிங்கம் அங்கிருந்து ஓடியது. உடனே பலத்தக் காற்றுடன் ஒரு மழை பெய்தது, உடனே காட்டு தீ அணைந்தது.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால் நாம் எவ்விதமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாலும் இயற்கை இயல்பாகவே சரி செய்யும் திறன் கொண்டது. எனவே, நாமும் இந்த கர்ப்பிணி மானைப் போலவே, கற்றுக்கொள்வோம், நாம் எந்த வித சூழ்;நிலையில் இருந்தாலும், எந்தவித கடினமான சூழலில் மாட்டிக்கொண்டாலும் நமக்கு முன்னால் இருப்பதைப் பற்றி முழு கவனம் செலுத்துவோம், இயக்கை தன் வேலையை இயல்பாக செய்து நமக்கு வெற்றியை தரும்.
0 Comments