கர்ம பலன்



             
இந்திய தத்துவவியல் கர்ம பலனை பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது. கர்மா என்பதன் அர்த்தம் முன்வினைப் பயன். கர்மா என்பதன் பொருள் பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. கர்மா என்ற சொல்லின் அர்த்தம் செயல். ஒரு மனிதனின் செயலைத் தான் கர்மா என்று அழைக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நம்மை அறியாமல் பல்வேறு காரணிகள் காரணமாகின்றன. இந்திய தத்துவவியல் கூறுகிறது மனிதன் 7 பிறவிகள் வாழ்வில் பெறுவான் என்று. முதல் பிறவியின் பயனை அவன் தனது அடுத்த பிறவியில் பெறுகிறான் அது ஒரு தொடர் வினை பயனாகிறது. ஒரு பிறவியில் நன்மை செய்யும் போது அவன் நன்மைக்கான கர்ம பலனைப் பெறுகிறான். கர்ம பலன் நான்கு விதத்தில் உள்ளது. 
1.உடலின் கர்மா 
2.மனத்தின் கர்மா
3.உணர்வின் கர்மா
4.சக்தியின் கர்மா.

                இதை ஒரு கதை மூலம் விளக்கிக் கூறலாம். முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் மிகவும் தாராள குணம் படைத்தவன். அந்த மன்னன் தினமும் அந்தணர்களுக்கு உணவழித்து அவர்களது பசியாற்றுவது வழக்கமாக கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் அரசன் உணவளித்துக் கொண்டிருக்கும் போது வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு பறந்து சென்றது. அப்போது அந்த பாம்பின் வாயிலிருந்து கொடிய வித்திலிருந்து ஒரு சிலத் துளிகள் அரசன் வைத்திருந்த பாத்திரத்தில் விழுந்து விட்டது. அரசன் அதை கவனிக்கவில்லை, மற்றவர்களும் அதை கவனிக்கவில்லை. அரசன் அந்த உணவை ஒரு அந்தணர்க்கு கொடுக்க அந்த அந்தணர் உண்ட மறு நிமிடமே கிழே விழுந்து மாண்டு போனான். அதைக் கண்ட மன்னன் மிகவும் வருத்தப்பட்டான்.

 
          கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்ரகுப்தனுக்கு மிகவும் குழப்பமாகிவிட்டது. யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது? கழுகிற்கா,பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகை குறை கூற இயலாது, ஏனென்றால் கழுகு தனது இரையைத்தான் தனது வாயில் கவ்விக் கொண்டு சென்றது. அது அதன் தவறில்லை. இறந்து போன பாம்பின் கொடிய விம் பாம்பின் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் அல்ல. அரசனும் இதை வேண்டுமென்றே செய்யவில்லை, அது அவனை அறியாமல் நடந்த நிகழ்வு.

சித்திரகுப்தன் தனது எஜமானான எமதர்மனிடம் கேட்கலாம் என்று அவனிடம் சென்று தன் குழப்பத்ததைக் குறித்துக் எடுத்துக் கூறினான். இதைக் கேட்ட எமதர்மன் சிறிது நேரம் சிந்தித்தப் பின், இதற்கான விடை வெகுவிரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக காத்திருக்கும்படி அறிவுறுத்தினான். அதற்கான நாளும் வந்தது. சில அந்தணர்கள் உதவி கேட்டு, அந்த அரசனைக் காணச் சென்றார்கள். அரண்மனைக்கு வழி தெரியாமல் சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள். அந்த பெண்மணியும் சரியான பாதையைக் காட்டிவிட்டு அவர்களிடம் “ஒரு வியம். சற்று எச்சரிக்கையாக இருங்கள். இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்” என்று கூறினாள்.

 இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு புரிந்தது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை இந்தப் பெண்மணிக்கே என முடிவு செய்தான். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், மற்றவர்களை நாம் பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும். பழி சொன்னதற்காக நடந்த எதையுமே உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு கர்மவினை அனைத்தும் வந்து சேரும்.எனவே நாம் மற்றவர்கள் மீது பழி சுமத்தும் முன் யோசித்து செயல்பட வேண்டும். நம் செயலால் தான் நம் கர்ம பலனை அடைகிறோம். எனவே நம்மால் இயன்றவரை நன்மையையே செய்வோம் 

நம் வாழ்கை நம் கையில்.

Post a Comment

0 Comments