இருபது வருடங்களுக்கு பிறகு சிறுகதை


 

அது ஒரு அமைதியான இரவு. சாலையில் மனிதர்களின் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்தது. வானிலிருந்து மழைத்துளிகள் முத்து முத்தாக வந்து விழுகின்றன. இதமான தென்றல் காற்று அடிக்கிறது. வானில் மின்னல் மிளிர்கிறது. சாலையில் அப்படியொரு அமைதி. கடைகள் எல்லாம் பூட்டப்பட்டுவிட்டன. அந்த நேரத்தில் ஒரு மனிதர் அங்கு தென்படுகிறார். உயரமான மனிதர் அவர், கையில் ஒரு கம்பை வைத்திருக்கிறார், மற்றொரு கையில் ஒரு விளக்கை வைத்திருக்கிறார். சாலையில் மிகவும் கம்பிரமான தோற்றத்துடன் நடந்து வருகிறார். அவர் அவ்வாறு நடந்து வருகையில் ஒவ்வொரு கடையின் பூட்டையும் பார்;த்துக் கொண்டு வருகிறார். இவர் இவ்வாறு அந்தப் பகுதியில் இரவில் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பார்ப்பவரை பயமுறுத்தும் தோற்றம் கொண்ட அந்த போலீஸ் ஒரு சிறு கடையின் பக்கமாக வருகிறார். அந்த கடையின் முன்னே ஒரு மனிதர் நின்று கொண்டு சிகரெட்டை பற்ற வைத்து, நின்றுக் கொண்டு குடித்துக் கொண்டிருக்கிறார்.


அந்த போலீஸ் அந்த மனிதரின் பக்கமாக வருகிறார். சிகரெட் குடித்துக் கொண்ட மனிதர் அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பதை தெரிந்து கொண்டு அவருக்கு வணக்கம் சொல்லுகிறார். மேலும் அந்த மனிதர் தொடர்கிறார், நான் என்னுடைய நண்பனை சந்திக்க இங்கு வந்தேன். நாங்கள் எங்கள் இளம் வயதில் இங்கு தான் சந்தித்து உறவாடுவோம். அப்போது எனக்கு 18 வயது என் நண்பனுக்கு 20 வயது, நாங்கள் சகோதரர்களைப் போல பழகி வந்தோம் என்றார். உடனே அந்த போலீஸ்காரர் சொன்னார் இது அந்த கடை அல்ல, இங்கு இருந்த கடை தகர்க்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது என்றார். அந்த மனிதர் மீண்டும் தொடர்ந்தார் இருபது வருடங்களுக்கு முன்பு நானும் என் நண்பனும் இந்த இடத்தில் மீண்டும் சந்திப்பது என்று முடிவெடுத்து நாங்கள் பிரிந்து சென்றோம் நான் வெளிநாடு சென்று வேலை பார்த்துவிட்டு இப்போது தான் என் நண்பனைப் பார்க்க வந்தேன் என்றார்.



   அந்த போலீஸ்காரர் உங்களது வாழ்கையும் வேலையும் எவ்வாறு உள்ளது என்று வினவினார். அந்த மனிதர் எனக்கென்ன நான் நன்றாக சம்பாதிக்கிறேன் நன்றாக இருக்கிறேன் என்று பதிலளித்தார். மீண்டும் அந்த போலீஸ் உங்கள் நண்பர் எப்போது வருவதாக கூறினார் என்றுக் கேட்க, அந்த மனிதர் பத்து மணியளவில் வருவதாக சொன்னார். போலீஸ் அவரிடம் இப்போது மணி என்ன என்றுக் கேட்டார். உடனே அம்மனிதர் பத்தாக மூன்று நிமிடங்கள் உள்ளன என்றார். போலீஸ் மீண்டும் அவரிடம் உங்கள் நண்பர் இங்கு 10 மணிக்கு வரவில்லையென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, அம்மனிதர் நான் என் நண்பனை பார்க்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறினார். அந்த போலீஸ் அங்கிருந்து சென்றுவிட்டார்.

      சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு ஒரு மனிதர் வந்தார். அங்கு வந்தவர் அவரது நண்பர். அவர் பெயர் ஜிம்மி. அந்த மனிதர் தனது நண்பர் ஜிம்மியை பார்த்து கூறினார், நண்பா நீ எப்படி இருக்கிறாய் ‘நீ இவ்வளவு உயரம் வளர்ந்துவிட்டாயே என்றார்’ உடனே நண்பர் கூறினார் 20 வருடங்கள் ஆகின்றதல்லவா அதனால் தான் இப்படி தோன்றுகின்றது என்றார். ஜிம்மி தனது நண்பரிடம் நாம் கொஞ்ச தூரம் நடந்து செல்வோம் அப்போது தான் நாம் உண்பதற்கு ஏதாவது கிடைக்கும் என்றார்.

 



இருவரும் நடந்து சென்றார்கள். அது மிகவும் இருட்டாக இருந்தது. இருவரும் நடந்து கொண்டு செல்லும் பொழுது ஒரு மருந்து கடை பக்கமாக வந்தார்கள் அங்கு வெளிச்சம் மிகுதியாக இருந்தது. உடனே அந்த நபர் அவரைப் பார்த்து நீ என் நண்பன் இல்லை அவனுக்கு கண்ணின் புருவத்தில் ஒரு வெட்டு காயம் காணப்படும், அதோடு அவன் பெரிய மூக்கு எவ்வாறு சின்னதாக மாறக் கூடும் என்று கேட்க, அங்கு நண்பர் வேடத்தில் வந்தவர் ஒரு போலீஸ்கார். கூறினார் நீங்கள் 10 நிமிடமாக கண்காணிப்பில் தான் இருக்கிறீர்கள் என்றார். மேலும் ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்து வாசிக்க சொன்னார். அந்த கடிதம் அவரது நண்பனால் எழுதப்பட்டிருந்தது. அதில் அவர் இவ்வாறு கூறிப்பிட்டிருந்தார், “நண்பா, நான் 10 மணிக்கு முன்னரே நான் உன்னைப் பார்க்க வந்தேன், அங்கு வந்த போலீஸ் நான் தான், உன்னை வெளிநாட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள், உன்னை என்னால் கைது செய்ய இயலாது ஆகவே இந்த போலீஸ் அதிகாரியை அனுப்பி உன்னை கைதுசெய்கிறேன் என்று எழுதியிருந்தது. 

Post a Comment

0 Comments