அறம் உள்ளவர்களாக வாழ்வோம்

அறம் உள்ளவர்களாக வாழ்வோம்





    அது ஒரு கடுமையான பாலைவனம். வெயிலின் தாக்கம் வழக்கம் போல கடுமையாக இருந்தது. சுற்றிலும் மணல் குவியல் குவியலாக தென்பட்டது. அங்கு ஒரு பயணி தவறுதலாக மாட்டிக் கொண்டார். அவர் தனது பயணத்திற்காக தான் கொண்டு வந்த அனைத்து உணவுகளையும் உண்டு விட்டார். அவரிடம் மீதம் இருந்தது ஒரே ஒரு பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர். வெயிலின் வெம்மை காரணமாக அவர் அதையும் குடிக்க நேர்ந்தது. அவர் அதை குடித்து முடித்தார். பயணத்தை தொடர்ந்தார். அவரால் வெகுதூரம் பயணிக்க முடியவில்லை தண்ணியை தேடினார். தன்னிடம் இருந்த பாட்டிலின் கடைசித்துளி நீர் வரை குடித்துவிட்டார். இருந்தபோதிலும் தாகம் தணியவில்லை. அந்த மனிதர் மனதில் நினைத்துக் கொண்டார், உணவும் இல்லை, தண்;ணீரும் இல்லை நான் இங்கேயே மாண்டு போக வேண்டியது தான். 

              மிகவும் சிரமத்துடன் அவர் சிறிது தொலைவு பயணித்து தூரத்தில் ஒரு ஓலை குடிசையைக் கண்டார். குடிசையைக் கண்டதும் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி. அந்த குடிசையை நோக்கி சென்றார். குடிசையினுள் நுழைந்து பார்த்தார் அவருக்கு அதிர்ச்சி. அங்கு மனிதர்கள் வசிப்பார்கள் தான் ஏதாவது உதவியை பெறலாம் என எதிர்பர்த்து சென்றார், அவருக்கு ஏமாற்றம். அங்கு ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது ஒடிச்சென்று அந்த பாட்டிலை எடுத்து தண்ணீரை குடிக்கப் பார்த்தார், அந்த பாட்டிலில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது. இந்த தண்ணீரை அந்த அடிகுழாயினுள் ஊற்றி அடிக்கவும் தண்ணீர் வரும் என்று. வாசித்த அந்ந மனிதருக்கு ஒரே குழப்பம் இருப்பதோ ஒரு பாட்டில் நிறைய தண்ணீர், அதை குழாயினுள் ஊற்றிவிட்ட பின்னர் தண்ணீர் வராமல் போனால், இல்லையென்றால் அந்த தண்ணீரைக் குடித்தால் தாகமாவது தணியும் என்ற யோசனையில் ஆழ்ந்தார்  வேகமாக அருகே சென்றார் விரைவாக அதை அடிக்க துவங்கினார்.

               ஐயோ பரிதாபம் தண்ணீருக்கு பதிலாக வெறும் காற்று மட்டும் வந்தது. அவருக்கு மிகுந்த ஏமாற்றம். இரண்டாவது முறையும் முயற்ச்சி செய்தார் தண்ணீர் வரவில்லை மிகவும் வேகமாக அடித்தார் உடனே தண்ணீர் பீறிட்டு வந்தது. பார்த்தவருக்கு மகிழ்ச்சி தாகம் தீர குடித்தார் பின்னர் தான் கொண்டு வந்த அனைத்து பாட்டில்களையும் நிரப்பினார். கடைசியாக அங்கிருந்து கண்டெடுத்த பாட்டிலை நிரப்பிவிட்டு அதில் ஒரு செய்தியையும் எழுதினார். இது உண்மையாகவே வேலை செய்கிறது. அவர் பாலைவனத்தில் தான் மட்டும் மாட்டிக்கொள்வதில்லை தன்னைப்போல வேறு யாராவது மாட்டிக்கொள்ளக் கூடும் என்பதற்காக அதை எழுதி வைத்தார். 

        ஆம் நாம் வாழுகின்ற இந்த உலகம் நமக்கு மட்டும் செந்தமானது அல்ல மாறாக நமக்கு பின்னரும் தலைமுறையினர் வாழ உகந்தது எனவே நாம் பிறருக்காக இந்த உலகை பாதுகாக்க வேண்டும். நாம் செய்யும் சிறு செயல் வருங்கால தலைமுறைக்கு உதவியாக அமையும். எனவே 

இயற்கையை பாதுகாப்போம் இயற்கை நம்மைக் காக்கும் 

Post a Comment

0 Comments